
அமெரிக்க குடியுரிமை உள்ளவர் நடிகை பூஜா குமார்.
தென்னிந்திய படங்களில் இவரது தலை தெரிந்திருந்தாலும் பூஜாகுமாரை முழுமையாக காட்டிய படங்கள் விஸ்வரூபம் ,உத்தமவில்லன்,பிஎஸ்வி கருடவீரா ஆகிய படங்கள்தான்.
உலகநாயகன் கமல்ஹாசனது நட்பு வட்டாரத்தில் ஒருவர்.
இந்தியாவுக்கும் ,அமெரிக்காவுக்குமாக பறந்து கொண்டிருந்த இவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது. ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.
விஷால் ஜோஷி என்கிற மிகப்பெரிய தொழிலதிபருடன் மீராகுமாருக்கு திருமணம் நடந்திருக்கிறது.
அமெரிக்க சிலிகான் வேலியில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் ஜோஷி தலைமை நிர்வாகியாக இருக்கிறார்.
“எங்களது மகள் நாவ்யா ஜோஷியை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் நானும் பூஜாவும் பெருமைப்படுகிறோம்.”என்பதாக பூஜாவின் கணவர் கூறி இருக்கிறார்.
இவர்களது திருமணம் மும்பையில் உள்ள திருமண மையம் வழியாக நடந்திருக்கிறது.












