தோழியுடன் சுற்றுலா சென்ற சமந்தாவுக்கு அவரது அம்மா கூறிய அறிவுரை!
நடிகை சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து முடிவு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக நடிகை சமந்தா தற்போது அவரின் தோழியுடன் இணைந்து வடஇந்திய கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார்.
அவரின் தோழிகளுடன் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமந்தா தொடர்ந்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ நீ இப்போது எப்படியாக இருக்கிறாயோ அப்படியே மகிழ்ச்சியாக இரு! எதிர்காலத்தில் உனக்கு என்ன வேண்டுமோ அதற்கு போராடு “ என தனது அம்மா கூறியதாக ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்