“ராகு கேது ஜி! எதிரிகளிடம் கருணை காட்டுங்கள்!”நடிகையின் பிரார்த்தனை.!

“துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து  நீ இன்பம் சேர்க்க மாட்டாயா ?”என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன்.

அது காதலிக்கு விண்ணப்பிக்கும்  காதலனின் வேண்டுதலாக இருக்கலாம்.

ஆனால் பொதுவாக இன்னல்கள் கண்டு அஞ்சுகிறவர்கள் ,எதிர்வரும் கஷ்டங்களை நினைத்துப் பயப்படுபவர்கள் ஆண்டவனிடம் அடைக்கலம் புகுவது இயல்பு.

அப்படித்தான் தலைவி நடிகை கங்கனா ரனாவத் ஆங்கில புத்தாண்டு பிறந்த நாளன்று திருப்பதியில் இருக்கிற ராகு-கேது கோவிலுக்கு சென்று வழிபட்டிருக்கிறார். பசு மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுத்திருக்கிறார்.

கோவிலுக்கு சென்றதற்கான காரணத்தை  அவர் மறைக்கவில்லை. 

அவர் மீது சில புகார்கள் போலீஸ் விசாரணையில் இருக்கிறது.

“எனது அன்பான எதிரிகள் மீது எனக்கு கருணை உண்டு.,இந்த புத்தாண்டில் குறைவான குற்றச்சாட்டுகளை கூறுங்கய்யா என்பதற்காகவும் ராகு கேதுவை வழிபட்டதாக “நையாண்டியுடன் சொல்லி இருக்கிறார். ஜெய் ராகு கேது ஜி!”