இங்கிலாந்து நடிகையுடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்!
தெலுங்கில் ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் எஸ்.கே 20′ படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். .இந்த படத்தில் சத்யராஜ் ,நவீன் பொலிசெட்டி முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளனர் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் கடந்த 10ம் தேதி முதல் துவங்கி உள்ளது. காரைக்குடி மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக படமாக்கப்படவுள்ளது.
Related Posts
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இங்கிலாந்து நடிகை ஒலிவியா மோரிஸ் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் ஏற்கனவே ராஜமவுலியின் ‘ஆர் ஆர் ஆர் ‘ படத்தில் ஜெனிபர் கதா பாத்திரத்தில் நடித்தவர்.அதேபோல் நடிகர் பிரேம்ஜி அமரன் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.