‘பிக்பாஸ்’ பிரபலத்துடன் ஜோடி சேர்ந்த ஹன்சிகா மோத்வானி!

ட்ரெண்ட்லவுட் படநிறுவனம்  தயாரிக்கும்   “மை3” என்ற புதிய ரொமான்டிக் காமெடி  இணைய தொடரை தமிழ் திரையுலகின் முன்னணி  இயக்குனர் ராஜேஷ் எம்.இயக்குகிறார்.

இத்தொடரில்  நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஆஷ்னா ஜவேரி, ஜனனி அய்யர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கணேசன் இசையமைக்கிறார்.

இந்த தொடரின் “மை3” தலைப்பை  நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ்  வெளியிட்டனர்.  இது குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியதாவது,’ இயக்குநர் ராஜேசுடன் பணிபுரிவது மிக இனிமையான அனுபவம்,

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு பிறகு அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி.  இது என்னுடைய முதல் இணைய தொடர்.  நடிகர்கள் முகேன் ராவ், சாந்தனு போன்ற இளம் திறமையாளர்களுடன் வேலை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இந்த தொடர் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அதே நேரம், ஒரு புதுமையான அனுபவத்தையும் தரும். எங்கள் தொடரின் தலைப்பை வெளியிடுவது மகிழ்ச்சியாக உள்ளது.”என்கிறார்.