3 மாத கர்ப்பம்: போட்டோஷூட் நடத்தி, புகைப்படம் வெளியிட்ட இலியானா!
கடந்த 2006 ஆம் ஆண்டு ’கேடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இலியானா.தொடர்ந்து தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் சரிவர அமையாததால்,தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி திரையுலகிற்கு தாவினார்
.இந்நிலையில், இலியானா புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரோ நீபோன் என்பவரை காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், திடீரென அவரை இலியானா பிரிந்ததாகவும் கூறப்பட்டது..பின்னர் பாலிவுட்நடிகை காத்ரினா கைஃப் சகோதரருடன் தற்போது டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தனது திருமண அறிவிப்பு குறித்து இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடாத நடிகை இலியானா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அதிரடியாக அறிவித்தார். தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை அவர் இதுவரை வெளியிடவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது முதல் முறையாக கர்ப்பமான வயிற்றுடன் ‘போட்டோஷூட்’ நடத்தியுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது நடிகை இலியானா தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், இன்னும் ஆறு அல்லது ஏழு மாதத்தில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.