யோகிபாபுவுடன் ‘சட்னி சாம்பாரு’ க்காக ஜோடி சேர்ந்த வாணிபோஜன்!
அழகிய தீயே, மொழி,அபியும் நானும்,பயணம்,பிருந்தாவனம்,பொம்மை உள்ளிட்ட படங்களைத்தொடர்ந்து இயக்குனர் ராதாமோகன் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில்.இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக , ‘சட்னி – சாம்பார்’ என்ற வெப் தொடரை இயக்குகிறார்.
இப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா சென்னையில் நடந்தது. நகைச்சுவை நடிகர் யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த சீரிஸ் குறித்து இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், “சட்னி – சாம்பார்’ சீரிஸின் படப்பிடிப்பை, அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் தொடங்கியிருக்கிறோம்.
இது முழுக்க முழுக்க காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும். இதில்,யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமில்லாமல், கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா இயக்குனர் நடிகர் ஆர் சுந்தர்ராஜன் ஆகியோருடன் இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகிய மூன்று குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.என்கிறார்.
நடிகர் யோகிபாபு கூறுகையில்..,
“சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு அருமையான சிரீஸாக “சட்னி சாம்பார்” இருக்கும்” என்றார்.
நடிகை வாணி போஜன் கூறுகையில்,
“டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மற்றொரு படைப்பில் இணைவது பெரும் மகிழ்ச்சி. யோகிபாபுவுடன் நடிப்பது இதுவே முதன்முறை. எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் ராதா மோகன் சார் இயக்கத்தில் பணிபுரியப் போகிறேன். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அட்டகாசமான சிரீஸாக இது இருக்கும்” என்றார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை பிரசன்னா குமார் கவனிக்க, அஜீஷ் அசோக் இசையமைக்கிறார். இப்படத்துக்கான வசனத்தை எழுத்தாளர் பொன் பார்த்திபன் எழுதியுள்ளார்.