மாரி செல்வராஜின் வாழை: டுவிட்டரில் பாராட்டி பதிவிட்ட உதயநிதி!
மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை தொடர்ந்து இயக்குனர்மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் புதிய படம்,’வாழை’ இதில்,கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் கவனிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள வாழை திரைப்படத்தின் சிறப்பு காட்சி உதயநிதி ஸ்டாலினுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இப்படத்தை பார்த்த மிகவும் விய ந்து பாராட்டியுள்ளார்இது குறித்து தனது டுவிட்டரில்,. ‘வாழை உங்களின் சிறந்த படைப்பு, மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.