அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகும் ‘ரசவாதி’ !

‘மௌன குரு’ , ‘மகாமுனி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சாந்தகுமார் தற்போது புதிய கிரைம் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ரசவாதி’ என்ற படத்தை இயக்கியுள்ளார்
இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க,இவர்களுடன் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவை சரவணன் இளவரசு மற்றும் சிவகுமார் கவனிக்க, எஸ்.எஸ். தமன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், மதுரை, கடலூர் மற்றும் பழனி போன்ற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.