விடுதலை-2; நவீன தொழில் நுட்பத்தை கையில் எடுத்த வெற்றிமாறன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ’விடுதலை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடந்து வருகிறது.

இபடத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், இப்படத்தில் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நடித்து வருகின்றனராம் இப்படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் 1960 ஆம் ஆண்டு நடக்கும் சம்பவங்களாக சித்தரிக்க பட்டுள்ளது என்கிறார்கள்.மேலும் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் ஆகிய இருவரையும்

இளமையான தோற்றத்தில் காட்டவேண்டும் என்பதால்க டீஏஜிங் என்ற நவீன தொழில்நுட்ப டெக்னாலஜியை வெற்றிமாறன் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ள வெற்றிமாறன் எஞ்சியுள்ள படப்பிடிப்புகளை இந்த ஆண்டுக்குள்ளேயே முடித்து விட திட்டமிட்டுள்ளாராம் இதையடுத்து அடுத்த வருடம் சூர்யாவின் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் கையில் எடுக்க உள்ளாராம்.