ஜல்லிக்கட்டு, மண்வாசனை, வாழ்க்கை, சூரசம்ஹாரம் போன்ற பல படங்களைத் தயாரித்தவர் சித்ரா ராமு. இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். நேற்று காலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று மாலை 7.00 மணிக்கு காலமானார். இவருக்கு வயது – 73
சித்ரா ராமுக்கு, தங்கம் என்கிற மனைவியும், விஜய சரவணன், விஜய கார்த்தி என்கிற இரு மகன்களும், குகப்ரியா என்கிற மகளும் உள்ளனர். இறுதி சடங்குகள் இன்று காலை 11.45 மணிக்கு அசோக்நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.உடல் தகனம் இன்றுமதியம் 1 மணிக்கு தி.நகர் கண்ணம்மாபேட்டைமின்மயானத்தில் நடக்கிறது .அவரது உடலுக்கு திரையுலகினர் பலர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.












