ஏ.ஆர். ரகுமான்-சாய்ராபானு விவாகரத்துக்கு பெண் இசைக்கலைஞர் காரணமா?
கடந்த சில வருடங்களாக சினிமா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது துணைகளிடம் இருந்து பிரிவது தொடர்பான செய்திகள் அதிகளவில் நாம் பார்க்க முடிகிறது. அந்த வகையில், பல ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின்னர் ரஹ்மானிடம் இருந்து பிரியும் இந்த கடினமான முடிவை எடுத்திருப்பதாக சாய்ரா பானு அறிக்கை வெளியிட்டார். இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானும் இதனை உறுதி செய்யும் விதமாக மறுதினம் தனது எக்ஸ் பக்கததில், மனைவி சாய்ரா பானுவை 29 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின்னர், பரஸ்பரமாக பிரிவதாக ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டிருந்தார்.இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் இசைக்குழுவில் பல வருடங்களாக ‘கிதார்’ கலைஞராக பணியாற்றிவரும் மோகினி டே. தனது கணவர் மார்க் ஹார்ட்சக் என்பவரை பிரிய இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஏ ஆர் ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக அறிவித்த சில மணி நேரத்தில் அவரது இசைக்குழுவில் இருக்கும் பெண் கிதார் கலைஞர் மோகினி டே தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மோகினி டே மற்றும் மார்ஷ் ஹார்ட்சச் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,”எனது அன்பான நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் என்னை இணையத்தில் பின்தொடர்பவர்களுக்கு, நானும் என் கணவரும் பிரிந்து விட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நானும் எனது கணவரும் பரஸ்பரமாக பிரிகின்றோம் என்பதை முதலில் எனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.”நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்களாகவே இருப்போம். எங்களது வாழ்க்கையில் இருவரும் வெவ்வேறு விஷயங்களை விரும்புகின்றோம். அதனால், விவாகரத்து மூலம் பிரிந்து செல்வதே சிறந்த வழி என்பதை இருவரும் சேர்ந்து முடிவு செய்துள்ளோம். ஆனால், மாமோகி மற்றும் மோகினி டே குழுவில் இருவரும் சேர்ந்தே வேலை செய்வோம். நாங்கள் இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறோம். அது மட்டும் எந்த நேரத்திலும் நிற்காது.உலகில் உள்ள அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். தற்போது வரை எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நேரத்தில் எங்களிடம் பாசிட்டிவாகவும், எங்களது தனிப்பட்ட விருப்பத்திற்கு மதிப்பளிக்கவும் வேண்டுகிறோம். தவறான கணிப்புகளைத் தவிர்ப்பது நல்லது,” என்றும் குறிப்பிட்டுள்ளனர் .இந்நிலையில் ஏஆர் ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு பிரிவதற்கு பாடகி மோகினி டே தான் காரணம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாக பரவி வருகிறது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் உண்மை அல்ல என்று ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா கூறியுள்ளார். மேலும், சாய்ராவும், ஏ.ஆர்.ரகுமானும் தாங்களாகவே இந்த முடிவை எடுத்துள்ளனர். அது ஒரு இணக்கமான விவாகரத்து.இருவரும் மிகவும் உண்மையானவர்கள். இந்த முடிவை எளிதாக எடுக்கப்படவில்லை.தேவையில்லாத கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம்.என்றவர்,ஏ.ஆர். ரஹ்மான் 29 ஆண்டுகள் தனக்கு மனைவியாக வாழ்ந்து வந்த சாய்ரா பானுவுக்கு ஜீவனாம்சம் கொடுப்பாரா? சாய்ரா பானு அதை எதிர்பார்க்கிறாரா? என்கிற கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘இப்போது அந்தளவுக்கு எல்லாம் வழக்கு செல்லவில்லை. ஆனால், இந்த விவாகரத்து வழக்கு இரு தரப்பிடமும் சுமூகமாகவே முடியும் என்று தான் தெரிகிறது. அதற்குத் தேவையான விஷயங்களை இருதரப்பும் செய்வார்கள் என்றும் கூறியுள்ளார்
மோகினி டே ஏ.ஆர்.ரஹ்மானுடன் உலகளவில் நடைபெற்ற 40க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் தான் தனது முதல் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். ஏ.ஆர் ரஹ்மான் மட்டுமின்றி, ஜாகிர் ஹுசைன், ரஞ்சித் பரோட், ஸ்டீவ் வை போன்ற புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். சிறு வயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்ட மோகினி டே, தனது தந்தை வழிகாட்டுதலில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு தற்போது சர்வதேச அளவில் திறமையான ஒரு இந்திய பாஸ் ப்ளேயர்களில் ஒருவராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.