கராத்தே பயிற்சிப் பள்ளி நடத்தி வருபவர் அர்ஜூன். அவர், தனது மனைவி அபிராமி, மகள் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் தம்பி விவேக் பிரசன்னாவுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். தனது மகளுக்கு சிறுவயது முதலே முகம் தெரியாதவர்களாக இருந்தாலும், அவர்கள் பாதிக்கபடும் சூழ்நிலையில், அவர்களுக்கு உதவும் குணத்தை போதித்து வருவதுடன் கராத்தே பயிற்சியையும் அளித்து வருகிறார், அர்ஜூன். இதனால், ப்ரீத்தி முகுந்தன் துனிச்சல் மிகுந்த பெண்ணாக வலம் வருகிறார்.
ப்ரீத்தி முகுந்தன் ஒரு நாள் அவர்களது குடும்பத்துக்கு சொந்தமான மெடிக்கல் ஷாப்பில் இருக்கும் போது, அவரது தங்கச்செயினை பறிக்க முயற்சிக்கிறார், ரௌடி வினோத் சாகர். அப்போது தனது அதிரடி கராத்தே மூலம் அவரை உதைத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கிறார். இந்த ஒரு செயின் பறிப்பு சம்பவத்தால், அர்ஜுனின் மொத்தக் குடும்பமும் ஒரு மாஃபியா கும்பல் தலைவன் ஜான் கொக்கேனிடம் மாட்டிக்கொள்கிறது. ஏன், எதற்கு? அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ஆக்ஷன் கமர்ஷியல் ட்ராமா!
தமிழ்ப் படங்களின் வழக்கமான லாஜிக் விதிமீறல்களுடன் கூடிய விறுவிறுப்பான படமாக, ‘பிளாஸ்ட்’ அமைந்துள்ளது. ஏறக்குறைய இரண்டு மணி நேரம் போவதே தெரியாது. ஆனால் ஒரு சிலருக்கு இது போரடிக்கும். இன்றைய சூழலில், பொது வெளியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்து மீறல்களில் இருந்து தற்காத்து கொள்ள, தற்காப்பு பயிற்சி அவசியமானது. என்பதை கராத்தே பின்புலத்தில் சொல்லியிருக்கும் இயக்குநரின் பாங்கு, பாராட்டுக்குரியது. மொத்தக் குடும்பமுமே கராத்தே பயிற்சி பெற்றிருப்பது போல் காட்சிகள் அமைத்திருப்பதும் சிறப்பானது. அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரது சண்டைக்காட்சிகள் பெண் ரசிகைகளிடம் பல த்த கைத்தட்டல் பெறும் காட்சிகளாக அமைந்திருக்கிறது. பல வன்முறை காட்சிகள் அமைந்து இருக்கிறது. அதை கொஞ்சம் தவிர்த்திருந்தால் குடும்பத்துடன் பார்ப்பதற்கு இன்னும் ஏதுவாக இருக்கும். கராத்தே சண்டைக்கான நுட்பங்களை வெளிப்படுத்தாமல் சண்டைக்காட்சிகள் அமைத்திருப்பதால் சற்று ஏமாற்றமும் உருவாகிறது.

பெண் குழந்தைக்கு தைரியத்தை சொல்லி வளர்க்கும் அப்பாவாக, கராத்தே பயிற்சி பள்ளி ஆசிரியராக நடித்திருக்கும் அர்ஜுன். அனுபவமான நடிப்பின் மூலமாக ரசிகர்களின் கவனம் ஈர்ப்பதுடன், சண்டைகாட்சிகளில் தனிக்கவனம் பெறுகிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிராமி பொறுப்பான மகளின் மீது அக்கறைப்படும், சராசரி அம்மாவாகவும், மகளுக்கு ஆபத்து எனும் சமயத்தில் சீறிப்பய்ந்து, பறந்து அடிக்கும் காட்சிகளில் பெண் ரசிகைகள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களிடமும் கை தட்டல்கள் பெறுகிறார்.
அர்ஜுன் – அபிராமி ஆகியோரின் மகளாக ப்ரீத்தி முகுந்தன். கதாபாத்திரத்தில் நன்கு பொருந்தியிருகிறார். சண்டைக்காட்சிகளில் சீறிப்பாய்கிறார். வழக்கமான ஆடிப்பாடித் திரியும் கதாநாயகிகளைப்போல் இல்லாமல் நடித்திருப்பதே சிறப்பு. வேலைக்குச்செல்லும் இடங்களில் தற்காப்பும், தைரியமும் பெண்களுக்கு எவ்வளவு முக்கியம். என்பதை இவர் மூலமாக வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர். அர்ஜூனின் தம்பிஆய நடித்திருக்கும் விவேக் பிரசன்னா கதாபாத்திரமும், நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.
தலைமை வில்லனாக நடித்திருக்கும் ஜான் கொக்கேன். தோற்றத்திலும், நடிப்பிலும் மிரட்டியுள்ளார். அவரைப்போலவே அர்ஜுன் சிதம்பரம். இவரது சண்டைக்காட்சிகள் படத்தின் பலமாக அமைந்திருக்கிறது. மற்றபடி பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்டோரும் சிறப்பான பங்களிப்பினை கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன். ஆக்ஷன் காட்சிகளுக்கு வலுவூட்டியிருக்கிறார். இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை, காட்சிகளுக்கு பரபரப்பினை கொடுத்துள்ளது.
எழுதி இயக்கியிருக்கும் சுபாஷ் கே.ராஜ், பெண்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தினையும் கொடுக்கச்செய்யும் தற்காப்புக்கலையின் அவசியத்தை கமர்ஷியலாகச் சொல்லி பாராட்டு பெறுகிறார். குறைகள் பல இருந்தாலும் ரசிக்கலாம்.
மொத்தத்தில், ‘பிளாஸ்ட்’ – பிளாஸ்ட்டுத்தான்!












