இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவான கவின் !
தமிழில் ‘பிட்சா’, ‘இன்று நேற்று நாளை’, ‘சத்ரியன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர், ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து ‘டாடா’ படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகர் கவின், தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
தற்போது நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘ஹாய் ’ வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து, ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் கவின் நடித்து வருகிறார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட்டை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது கவின்- மோனிகா தம்பதிக்குcஒரு ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
இது குறித்து நடிகர் கவின் தனது எக்ஸ் தள பக்கத்தில் ” எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்”. என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.