Wednesday, February 18, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்!-ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு!!

admin by admin
December 31, 2017
in News
429 4
0
600
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter
தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்!-ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு!!
என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர் பெருமக்களே,தமிழக மக்களே ,என் அன்பான வணக்கங்கள் .முதலில் ரசிகர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரிய வில்லை.கடந்த ஆறு நாட்களா எவ்வித தொந்தரவும் இல்லாம கட்டுப்பா டோடு இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. கட்டுப்பாடு இருந்தா எதை வேணா சாதிக்கலாம். ரொம்ப பில்டப்  ஆயிடுச்சுல்ல, நான் பில்டப் கொடுக்கலைங்க  எனக்கு அரசியலுக்கு வருவது பற்றி பயம் இல்லை  இந்தா மீடியாவை பார்த்து தான் பயம் . இது காலத்தி ன் கட்டாயம். இது காலத்தின் கட்டாயம்…! சட்டம ன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து   தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும்   நான் போட்டியிடுவேன் . நான்     எல்லாத்தையும் முடிச்சிட்டேன். இன்னும் அம்பு விடுவதுதான் பாக்கி, நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் நான் தனிக் கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நான் நிப்பேன். அதுக்கு முன்னாடி உள்ளாட்சித் தேர்தல் வருது. அதுக்கு நேரம் இல்லாததால போட்டியிடலை. பாராளுமன்றத் தேர்தல்ல முடிவெடுப்பேன்.சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கி கட்சியின் செயல் திட்டங்களை அறிவிப்பேன். ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வரை நான் அரசியல் பேசமாட்டேன்.அரசியல் என்னும் குளத்தில் நாம் இன்னும் இறங்கவில்லை ஆனால் நீந்தத் தெரியும். தகுந்த வேலைக்கு தகுந்த நபரை நியமித்து கண்காணிக்கும் பிரதிநிதியாக இருப்பேன்.பெரிய ஜாம்பவான்களே மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள், நான் குழந்தை.சோ சார் எனக்கு மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என பயம்காட்டி வைத்திருந்தார். இப்போது சோ இருந்திருந்தால் எனக்கு 10 யானை பலமாக இருந்திருக்கும்.சோ ஆத்மா எனக்கு பலமாக இருக்கும்.கட்டுப்பாடு ஒழுக்கம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம்

நான் அரசியல்ல வரது பேருக்கும், புகழுக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் வரலை. அதை நீங்க ஆயிரம் மடங்கு கொடுத்துட்டீங்க. பதவி மேல எனக்கு ஆசை இருந்தால் 1996லயே நான் அரசியல்ல வந்திருப்பேன். அது வேண்டாம்னு தள்ளி வைச்சேன். 48 வயசுலயே அதை தள்ளி வச்சேன், 68 வயசுல அந்த ஆசை வருமா. அரசியல் ரொம்ப கேட்டுப் போச்சி. நாட்டு அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சி.ஜனநாயகம் சீர்கெட்டுப் போச்சி. கடந்த ஒரு ஆண்டா, தமிழ்நாட்டில் நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள், ஒவ்வொரு தமிழக மக்களையும் தலைகுனிய வச்சிடுச்சி. எல்லா மாநில மக்களும் நம்மளப் பார்த்து சிரிக்க வச்சிட்டிருக்காங்க.இந்த நேரத்தில் இந்த முடிவை நான் எடுக்கலைன்னு சொன்னால், என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்காக நான் இந்த முடிவெடுக்கலன்னா அந்த குற்ற உணர்வு என்னை பாதிக்கும். அரசியல் மாற்றம், அதுக்கு நேரம் வந்தாச்சி, சிஸ்டமே மாத்தணும். உண்மையான நேர்மையான நாணயமான வெளிப்படையான சாதி மத சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியல் கொண்டு வரணும். அதுதான் என்னுடைய நோக்கம், விருப்பம், குறிக்கோள். அது ஒரு தனி மனுஷனால முடியாது.இது சினிமா இல்லை, நாம் காவலர்களாய் மாறப்போகிறோம், நாம் மட்டும் போதாது.எல்லாவற்றையும் மாற்றனும்,தகுந்த பதவிக்கு தகுந்த ஆளை நியமித்து வேலை பார்க்கிறார்களா என்பதை கண்காணிப்பதே எனது வேலை.அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலுக்கு வருவது எளிதல்ல அது கடலில் மூழ்கி முத்துக்குளிப்பது.பெண்கள், படித்தவர்கள், படிக்காதவர்களை அனைவரையும் மன்றத்தில் இணைக்க வேண்டும்.ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து காவலர்களாக மாற்றுவேன் .    நேர்மையான, வெளிப்படையான ஆன்மீக அரசியலை கொண்டுவர வேண்டும்.கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிப்பது நடுக்கடலில் முத்தெடுப்பதை போன்ற கஷ்டமானது. ஆண்டவன் அருள், மக்கள் அன்பு, ஆதரவு இருந்தால்தான் இதை சாதிக்க முடியும்.இரண்டுமே எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. பெயர், புகழ், பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரப்போவதில்லைசட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின் வாக்குறுதிகளை 3 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை எனில் பதவி விலகுவேன்.அரசியல் என்னும் குளத்தில் நாம் இன்னும் இறங்கவில்லை ஆனால் நீந்தத் தெரியும். தகுந்த வேலைக்கு தகுந்த நபரை நியமித்து கண்காணிக்கும் பிரதிநிதியாக இருப்பேன். பழைய காலத்தில் அடுத்த நாட்டு கஜானாவை கொள்ளையடிப்பார்கள்இப்போ சொந்த நாட்டிலேயே, சொந்த பூமிலேயே கொள்ளையடிக்கிறார்கள்.கட்சி சிஸ்டத்தையே மாற்ற வேண்டும், வேர், கிளை போன்ற அனைத்துமே தொண்டர்கள்.தமிழக மக்கள் எல்லாரும் என் கூட இருக்கணும். இது சாதாரண விஷயமில்லை, இது எனக்குத் தெரியும். கட்சி ஆரம்பிச்சி, தேர்தல்ல போட்டியிடறது சாதாரண விஷயமில்ல. நடுக்கடல்ல முத்து எடுக்கிற மாதிரி. மக்களுடைய அன்பு, அபிமானம், ஆதரவு இருந்தால்தான் இதை சாதிக்க முடியும். ஆண்டவனுடைய அருள், மக்களுடைய அன்பு இரண்டும் எனக்குக் கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு” என ரசிகர்களின் ஆரவாரத்துடன் அறிவித்தார்.

.

You might also like

நடிகர் விஜய்யின் உதவியாளருக்கு ரூ.50,000, வேலை வாய்ப்பு வழங்கிய பிடி.செல்வகுமார்!

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா!

பகலில் பெண். இரவில் ஆண் : பெயர் ரஜினி! சுந்தர்.சி யின் படம்.!

admin

admin

Related Posts

நடிகர் விஜய்யின் உதவியாளருக்கு ரூ.50,000, வேலை வாய்ப்பு வழங்கிய பிடி.செல்வகுமார்!
News

நடிகர் விஜய்யின் உதவியாளருக்கு ரூ.50,000, வேலை வாய்ப்பு வழங்கிய பிடி.செல்வகுமார்!

by admin
February 18, 2026
சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா!
News

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா!

by admin
February 18, 2026
பகலில் பெண். இரவில் ஆண் : பெயர் ரஜினி! சுந்தர்.சி யின் படம்.!
News

பகலில் பெண். இரவில் ஆண் : பெயர் ரஜினி! சுந்தர்.சி யின் படம்.!

by admin
February 18, 2026
சைபர் க்ரைம் த்ரில்லர், திரைப்படம், ‘அச்சுத அவதாரம்’!
News

சைபர் க்ரைம் த்ரில்லர், திரைப்படம், ‘அச்சுத அவதாரம்’!

by admin
February 18, 2026
ஆரி அர்ஜுனன் – தீப்ஷிகா நடித்த 4த் ஃப்ளோர் 27 ஆம் தேதி வெளியாகிறது!
News

ஆரி அர்ஜுனன் – தீப்ஷிகா நடித்த 4த் ஃப்ளோர் 27 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
February 18, 2026

Recent News

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா!

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா!

February 18, 2026
பகலில் பெண். இரவில் ஆண் : பெயர் ரஜினி! சுந்தர்.சி யின் படம்.!

பகலில் பெண். இரவில் ஆண் : பெயர் ரஜினி! சுந்தர்.சி யின் படம்.!

February 18, 2026
சைபர் க்ரைம் த்ரில்லர், திரைப்படம், ‘அச்சுத அவதாரம்’!

சைபர் க்ரைம் த்ரில்லர், திரைப்படம், ‘அச்சுத அவதாரம்’!

February 18, 2026
ஆரி அர்ஜுனன் – தீப்ஷிகா நடித்த 4த் ஃப்ளோர் 27 ஆம் தேதி வெளியாகிறது!

ஆரி அர்ஜுனன் – தீப்ஷிகா நடித்த 4த் ஃப்ளோர் 27 ஆம் தேதி வெளியாகிறது!

February 18, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?