போலீஸ் அதிகாரி ஆகணும் என்கிற லட்சிய வெறி திருநெல்வேலி அல்வா மாதிரி ஆகி இருக்கிறது டைரக்டர் ஹரிக்கு! சூர்யாவை வைத்து 3 சிங்கங்களை அவிழ்த்து விட்டு கரன்சிகளை அடுக்கி விட்டார்கள். தற்போது சாமி டூ ஆட வரப்போகிறது. அது சீயான் சொத்து.கரகம் எடுத்து ஆடி அமர்க்களம் பண்ணி விடுவார்.இதன் பின்னர்தான் சூர்யா கூட்டணி.
இது போலீஸ் கதையா, முல்லைப்பூ காதலா என்பது தெரியவில்லை. ஒருவேளை தற்கால அரசியலை அடித்து துவைக்கும் கதையா? ஹரியால் டன் கணக்கில் அடி கொடுத்தானே பழக்கம்!