வீடு தீ பிடிச்சி எரியிறபோது குடிக்கிறதுக்கு கூல்டிரிங்ஸ் கொண்டுவந்து கொடுக்கிற மாதிரி தமிழ்நாடே உயிர் பிரச்னைக்காக போராடிக் கொண்டு இருக்கிறபோது “சிக்சர் அடி! கேச் பிடி!” என்று கிரிக்கெட் போட்டியை நடத்தினால் நல்லா இருக்குமா என்று கேட்க, கிரிக்கெட் போர்டில் தமிழர்களே இல்லை போலும்!
இருக்கிறார்கள் என்பது உண்மையானால் அவர்களுக்கு தமிழ்நாட்டைப் பற்றி கவலை இல்லை என்பது உச்சந்தலையில் அடிக்கும் சத்தியம். சூப்பர் ஸ்டார் ரஜினி “நடத்துவது நல்லதுதானா என்று யோசியுங்க” என சொல்லி இருக்கிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜா தமிழக ஆளுநரிடம் தடை விதிக்கச்சொல்லி மனு கொடுத்திருக்கிறார் .அதிமுகவினரும் தீ கொளுத்தி எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
இவையெல்லாம் முன் எச்சரிக்கையாக இருக்கலாம்.என்ன செய்யப் போகிறது?