குத்துப்பாட்டும் கும்கும் குத்துமே தமிழ்ச்சினிமாவின் ‘கமர்ஷியல் ஃபார்முலா “என்கிற பலவீனமான நூலைப் பிடித்துக்கொண்டு சிலர் தொங்குகிற நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி உள்பட பலர் அந்த நூலினை தொடுவது கூட இல்லை.கதையும் பலமும்மண்சார்ந்தது என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.
சீனுராமசாமியின் இயக்கத்தில் மற்றொரு இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்க இருக்கிறார்.
“இந்தப்படம் எப்போது தொடங்கும்?”
“விஜயசேதுபதியின் ‘மாமனிதன்’முடியட்டும் .பிறகு சொல்கிறேன்.ஆனால் கனி க்கு உரிய கதை.கேரக்டர் என்பதை மட்டும் இப்போது சொல்லமுடியும்!”
“கண்ணே கலைமானே’ ரெடியா?”
“வேலை நிறுத்தத்தால் சில பணிகள் முடியவில்லை. இந்த படம் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகப்பெரிய திருப்பம் தரும்.அவருக்குள் இருக்கிற ஆற்றலை வெளியில் கொண்டு வந்திருக்கிறேன்.அவர் மம்மூட்டி மாதிரியான திறமைசாலி .உதயநிதி, வடிவுக்கரசி இவர்களுக்கு விருதுகள் கிடைக்கும். அவருக்கு மக்கள் நண்பன் என்கிற பட்டத்தை நான் கொடுக்கப் போகிறேன்’ என்றார்
அனேகமாக திரைப்பட வேலை நிறுத்தத்துக்கு நாளை முடிவு தெரியலாம்.மந்திரி முடித்து வைப்பாரா முறித்துப் போடுவாரா ?