“நல்ல வேளை இன்றைக்கு ராகுகாலம் 3 மணிக்குத்தான்! நல்லபடியா தாலியை கட்டி சாந்தி முகூர்த்தமும் செமத்தியா முடிஞ்சா நல்லதுதான்.முறைமாமன் என்று எவனாவது உறவு சொல்லி கட்டையப்போடாம இருந்தா சரி “என்று மனசுக்குள் மாப்பிள்ளை வேண்டிக் கொள்வது மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள் ஒவ்வொரு தயாரிப்பாளரும்!
தணிக்கை தேதியை வைத்துதான் இனி படங்களின் ரிலீஸ்.தயாரிப்பாளர் சங்கமே படங்களை கொடுக்கும். அப்படிப் பார்த்தால் ‘காலா’ படத்தின் ரிலீஸ் ஜூனில்தான் என்கிறார்கள்.தணிக்கை வரிசைப் படிதான் படங்களைக் கொடுப்பதால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும்.ஆனால் தியேட்டர்கள் வாங்குமா? தமிழக அமைச்சர்கள் வேலுமணி ,வீரமணி,கடம்பூர் ராசு ஆகியோர் முன்னிலையில் தொடங்கியிருக்கிறது.
இன்றைய காலை நேரத்துப் பேச்சு வார்த்தையில் சங்கத்தின் சார்பில் விஷால், கதிரேசன்,எஸ்.ஆர்.பிரபு,ஆர்.கே.செல்வமணி,கேயார் ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆன்லைன் டிக்கட் ,தியேட்டர்களில் தின்பண்டங்களின் விலை பற்றி முக்கியமாக முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக அரசு நிர்ணயம் செய்துள்ளபடி பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில்லை. அரசின் உத்திரவை குப்பையில் போட்டுவிட்ட வடபழனி தியேட்டர் ஒன்றில் அடிக்கவே வருகிறார்கள்.
நல்ல முடிவுக்கு வாங்கப்பா!
‘