இதுவரை தமிழ்ச்சினிமா உலகில் யாரும் இப்படி ஒரு முயற்சியில் இறங்கியதில்லை.
“இதாண்டா விஷால் ஸ்டைல்” என தனக்கென ஒரு வழியை வகுத்துக் கொண்டு அதில் திகிடு முகுடா புகுந்து அடிப்பார். அனேகமாக இந்தியாவிலேயே யாரும் பத்திரிகையாளர்களுக்கு இன்டர்வெல் வரையிலான படத்தை தனியாக போட்டு காட்டி இருக்க மாட்டார்கள்.
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள ”இரும்புத்திரை “ படத்தில் விஷால் – சமந்தா அக்கினேனி – அர்ஜுன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.. இப்படத்தின் முதல் பாதி திரையிடல் இன்று நடைபெற்றது இதில் படத்தின் இயக்குநர் மித்ரன் , லைகா குழுமத்தை சேர்ந்த கருணா , அயுப் கான் , எடிட்டர் ரூபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஹாலிவுட்டில் இப்படித்தான் பாதிப்படத்தை திரையிட்டு பத்திரிகையாளர்களிடம் கருத்து கேட்பார்கள். அதைப்போல இயக்குநர் மித்ரன் கருத்து கேட்டார்.
“எப்போதும் புதுமையை விரும்புபவர் விஷால் சார். அவர் தன்னுடைய ஏதாவது ஒரு படத்தின் முதல் பாதியை செய்தியாளர்களுக்கு திரையிட்டு கருத்து கேட்க வேண்டும் என்று நினைத்துவந்தார். அது இரும்புத்திரை படத்துக்கு நடந்துள்ளது காரணம் இரும்புத்திரைக்கு படத்துக்கு சரியாக இருக்கும் என்பதால் தான். இரும்புத்திரை திரைப்படத்தின் இண்டர்வல் ப்ளாக் சரியான ஒன்றாக இருக்கும். இரும்புத்திரை ஆதாரினால் ஏற்ப்படும் ஆபத்தை பற்றி பேசும் படம் அல்ல டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் படமாக இருக்கும்.” என்றார்