வறண்டு கிடக்கிற நிலத்தில் மழை பெய்தால் விவசாயிக்கு மகிழ்ச்சி. அதிலும் கண்மாய் நிறைந்துவிட்டால் அவன் போடுகிற கணக்கே தனி! அது மாதிரிதான் சமந்தா அக்கிநேனி கதையும்.!
நடிகையர் திலகம் படம் உலக அளவில் பாராட்டுகளை குவிப்பதால் இதுதான் அரிய வாய்ப்பு என்று கணக்குப் போட்டு புதுக்கணக்கு எழுதுகிறார். அவரது சம்பளம் உயர்கிறது.
“பார்யா..இந்தப் பொண்ணு அக்கிநேனி குடும்பத்துக்கும் வாக்கப்பட்டு போன ராசி சினிமாவில் அந்தஸ்தையும் சம்பளத்தையும் உயர்த்தி விட்டதே ” என்று பாராட்டுகிறார்கள்.