“அடுப்பே பத்த வைக்கல. அதுக்குள்ள ஆப்பம் ருசியா இல்லேன்னு சொல்றது சரியாடா மக்கா?”-இப்படி கேட்கிறது கோலமாவு கோகிலா யூனிட்.
“கொரியன் படத்தை சுட்ட கதை, ஜப்பான் படம் அப்படியே காப்பி.” என்று பலவிதமாக நெட்டிசன்ஸ் பதிவு செய்வார்கள்.இதே கதைதான் தற்போது நயன்தாராவின் படத்துக்கும்!
நெல்சன் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. போதை மருந்து விற்கிற கேரக்டர் என்பதாக மேலெழுந்தவாரியாக பேசப்படுகிறது
‘பிரேக்கிங் பேட் படத்தின் தழுவல்தான் என்கிறார்கள்.
ஆனால் நெல்சன் சொல்வதென்ன?
“குடும்பசெண்டிமென்ட் கதை.நயனுக்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்கிறார்.ஜூலையில் ரிலீஸ்.அதற்குள் என்னென்னவோ ஜோசியம் சொல்றது சரியா?” என்கிறார்.
அதுவும் சரிதான்.வயிற்றுக்குள் இருக்கும் போதே அது ஆண் குழந்தைதான் என்று சத்தியம் பண்ணக்கூடாது.