

சீயான் படம் என்றாலே,அவரின் டிஃபரென்ட் கெட்டப்க்கு ஒரு ரசிகர் பட்டாளமே காத்துக் கிடக்கிறது. அந்த வகையில் விக்ரமின் எடுப்பான போலீஸ் கெட்டப்புக்கு துடிப்பான பின்னணி இசையமைத்து சாமி ஸ்கொயர் படத்தின் மோஷன் போஸ்டரிலேயே தன் புதுமையான முயற்சியை கையாண்டிருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், 26 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் டிரைலரையும் தன் ஸ்டைலில் மிரட்டியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டிருக்கிறது.விக்ரம் = ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு அடுத்தமாதம் இருக்கும் என்றும், அதற்கு முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் சிங்கிள் ட்ராக் வெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.