Monday, June 8, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சொல்லக்கொதிக்குதடா ! காக்கை குருவியா என் மக்கள்?

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டிக்கும் தமிழ் நடிகர்கள்.

admin by admin
May 23, 2018
in News
437 4
0
611
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

 

You might also like

திருச்சி கிழக்கு’ தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ்? ஜூன் 11-ல் அறிவிப்பு!

பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் ‘ரேனிகுண்டா 2’ !

தனுஷின் மருமகன் , குஷ்புவின் மகள் இணையும் “அட்டாக்கர்”!

 

” உழுது விதைத்து அறுப்பார்க்கு உணவில்லை. பிணிகள் பலவுண்டு :பொய்யைத் தொழுதடிமை செய்வோர்க்குச் செல்வங்களுண்டுண்மை சொல்வோர்க்கெல்லாம் எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு தூக்குண்டே யிறப்பதுண்டு.முழுதுமொரு பேய் வனமாம் ” என்று ஜார் மன்னனின் ரஷ்யாவை அன்று பாடினான் பாரதி.

அந்த பேய்வனமாகி இருக்கிறது  தமிழ்நாடு. மனித உயிர்கள் விலை இல்லா இலவசப் பொருளாகி விட்டது ,

தூத்துக்குடியில் அப்பாவி மக்களை துப்பாக்கிகுண்டுகளால் துளைத்து எடுத்திருக்கிறது அராஜக அரசு. இது வரை 12 பலி! இனியும் எத்தனையோ!

எரிதழல் கொண்டு வா என வீமன்  ஆவேசம் கொண்டதைப் போல மொத்த தமிழகமும்  கொதித்திருக்கிறது.

தமிழ்ச்சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர்கள் குருதி கொண்டு எழுதி இருக்கிறார்கள்.

சூர்யாவின் சூளுரையை கேளுங்கள்!

“தூத்துகுடியில் நடந்த மக்கள் போரா ட்டம் கொடூரமான உயிர்ப் பலிகளைச் சந்தித்திருக்கிறது. தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக ஆங்காங்கே நடக்கிற மக்கள் போராட்டங்களும், அவற்றில் தொடர்ந்து ஏற்பட்டுவருகிற இழப்புகளும் தொடர்ந்து ஒருவிதக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது.

போராட்டத்தில் வன்முறை கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு. அதேநேரம், போராடுவதே வன்முறை ஆகிவிடாது. பாதிப்புகள் அதிகரிக்கும்போது போராடுவது ஒன்றுதான்  மக்களின்முன்நிற்கும்  ஒரே வழி. மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆட்சியாளர்களே மக்களுடைய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும்.
தூத்துக்குடியில் நடந்திருப்பது ஏதோ சாதிக் கலவரமோ, மதக்கலவரமோ அல்ல. வாழ்வாதாரத்திற்கான நீண்ட காலப் போராட்டம்.  மக்கள் ‘ஸ்டெர்லைட் ஆலை’க்கு எதிராக திடீரென்று ஒரு நாளில் வீதிக்கு வந்து போராடிவிடவில்லை. 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இந்த ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.   “ஆபத்து நிறைந்த இந்தத் தொழிற்சாலை எங்களுக்கு வேண்டாம்” என்று மகாராஷ்டிர மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டு, தமிழ்நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்ட ஆலை இது.
சின்ன குழந்தைகளும் ‘ஸ்டெர்லைட் ஆலை எங்களுக்கு வேண்டாம்’ என்று அறிவிப்புப் பலகை ஏந்தி, களத்தில் நின்றனர். ஒரு சமூகத்தில் குழந்தைகள்கூட போராட வேண்டியிருக்கிற சூழல் அவமானகரமானது. மக்கள் எதிர்ப்பு, அறிஞர்கள் எதிர்ப்பு, சட்டப் போராட்டம் கடந்து, ஆபத்து விளைவிக்கிற ஒரு ஆலை இயங்குவது நியாயப்படுத்தவே முடியாதது. பல்வேறு அத்துமீறல்களை செய்து, மக்களின் உயிருக்கும், தூத்துக்குடி பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு தொழிற்சாலையை இத்தனை எதிர்ப்புகளையும் மீறி என்ன காரணத்துக்காகச் செயல்பட அனுமதிக்கிறார்கள்?
நான் படப்பிடிப்பிற்குப் பல முறை தூத்துக்குடி சென்றிருக்கிறேன். அங்குள்ள மக்களிடம் பேசியிருக்கிறேன். சாதரண மக்களிடம் பேசும்போதுகூட, ‘ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்’ என்று சொல்வார்கள். காரணங்கள் இல்லாமல் இல்லை. பாதிப்புகள் அப்படி!
2012-ல் மட்டும் 2,552 பேர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையின், புற்றுநோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றிருக்கின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறிய முடிந்த தகவல் இது. தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடிநீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்திருக்கின்றன. நச்சு கலந்த காற்றைச் சுவாசிப்பதன் மூலம் பல்வேறு விதமான நோய்களால் மக்கள் பாதிப்படைந்திருக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் உச்ச நீதிமன்றம் வரை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.
தூத்துக்குடியின் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக மட்டும் அல்ல; விவசாய நிலங்களையும் வாழ்வாதார இடங்களையும் அழிக்கிற ‘ஹைட்ரோ கார்பன் திட்டம்’, ‘மீத்தேன் திட்டம்’, ’நியூட்ரினோ திட்டம்’ என்று தமிழக மக்கள் இன்று எதிர்க்கும் பல திட்டங்களும் அடிப்படையில் இந்த மண்ணைக் காப்பதற்கான போராட்டங்கள். தங்கள் வாழ்க்கையைக் காத்துக்கொள்வதற்காக மக்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.  ‘ஆபத்துமிக்க திட்டங்கள் அனைத்தையும் ஒரு குப்பைக்கூடைக்குள் தூக்கி எறிவதைப்போல, தமிழகத்தில் செயல்படுத்துகிறார்கள்’என்கிற குற்றச்சாட்டை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மக்கள் போராட்டங்களை “பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட தொழிற்சாலைகளை மூடச்சொல்வது நியாயமில்லை; திட்டங்களை நிறுத்தச் சொல்வது சரியில்லை” என்று கொச்சைப்படுத்துபவர்கள், பல ஆயிரம் மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதற்கு என்ன பதில் வைத்திருக்கின்றனர்? மக்கள் தங்களுடைய நலனைப் பாதுகாக்கவே வாக்களித்து அரசைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த அரசு மக்களின் பக்கம் நிற்பதுதானே அறம்?
அரசு என்ன சொல்கிறது? ‘‘வேலைவாய்ப்பு தருகிறோம்” என்கிறது. ‘‘எங்களுக்கு உங்கள் வேலை வேண்டாம். உயிரும் ஆரோக்கியமான வாழ்க்கையும்தான் முக்கியம்” என்று மக்கள் சொல்லும்போது, “உங்கள் நலனுக்காகவே இதைச் செய்கிறோம்” என்ற அரசின் பதில் உள்நோக்கம் கொண்டதாகவே வெளிப்படுகிறது. அப்படியென்றால், யாருடைய வாழ்வாதாரத்தை அடகு வைத்து, யாருடைய வளர்ச்சிக்கான திட்டங்களை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்?
ஒரு பிரச்னையை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து போராடும்போது, மக்களின் உணர்வுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும். சட்டத்தின் துணைகொண்டும், அதிகாரத்தின் வாள் கொண்டும் அவர்களை எதிர்கொள்ளக் கூடாது. ஆரோக்கியமான உடல் ஒன்றுதான் எளிய மக்களின் ஆதாரம். அதை வைத்துதான் அவர்கள் வாழ்வை எதிர்கொள்கிறார்கள். இன்று வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கொண்டுவரப்படும் திட்டங்கள் பலவும் சுற்றுச்சூழலை நாசப்படுத்தி, எளிய மக்களின் உடலாதாரத்தைக் குலைக்கின்றன.
வயல்களை அழித்து, மலைகளை உடைத்து, வனத்தை நாசப்படுத்தி, ஆறுகளைச் சூறையாடி கொண்டுவரப்படும் எந்தப் பொருளாதார லாபமும் நிச்சயம் மக்களுக்கானவை அல்ல. அது வேறு யாருக்கானதோ என்பது நிதர்சனம். ‘இதை மக்களின் நலனுக்காகச் செய்கிறோம்’என்பது சாத்தான் ஓதும் வேதம்.  இனி இழப்புகள் மக்களுக்கானதாக இருக்கக் கூடாது. இனியும் இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாது!” என்று சூர்யா கூறி இருக்கிறார்.
admin

admin

Related Posts

திருச்சி கிழக்கு’ தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ்? ஜூன் 11-ல் அறிவிப்பு!
News

திருச்சி கிழக்கு’ தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ்? ஜூன் 11-ல் அறிவிப்பு!

by admin
June 7, 2026
பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும்  ‘ரேனிகுண்டா 2’ !
News

பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் ‘ரேனிகுண்டா 2’ !

by admin
June 7, 2026
தனுஷின் மருமகன் , குஷ்புவின் மகள்  இணையும் “அட்டாக்கர்”!
News

தனுஷின் மருமகன் , குஷ்புவின் மகள் இணையும் “அட்டாக்கர்”!

by admin
June 6, 2026
’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
June 6, 2026
ஜீத்து மாதவனின்  ‘பாலன் தி பாய்’ டிரைலர் வெளியானது!
News

ஜீத்து மாதவனின் ‘பாலன் தி பாய்’ டிரைலர் வெளியானது!

by admin
June 6, 2026

Recent News

பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும்  ‘ரேனிகுண்டா 2’ !

பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் ‘ரேனிகுண்டா 2’ !

June 7, 2026
தனுஷின் மருமகன் , குஷ்புவின் மகள்  இணையும் “அட்டாக்கர்”!

தனுஷின் மருமகன் , குஷ்புவின் மகள் இணையும் “அட்டாக்கர்”!

June 6, 2026
’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

June 6, 2026
ஜீத்து மாதவனின்  ‘பாலன் தி பாய்’ டிரைலர் வெளியானது!

ஜீத்து மாதவனின் ‘பாலன் தி பாய்’ டிரைலர் வெளியானது!

June 6, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?