இந்த ரூட்டுல பஸ் போனா பாதி வழி ஸ்மூத்தாகவும் மீதி வழி பள்ளமும் மேடுமாகவும்தான் பயணம் இருக்கும் என்கிற டைப் கதை. போதி மரத்து அடியில் அமர்ந்து தவம் இருந்து வளர்த்த கதை இல்லை. “இன்னும் தள்ளிப்போனால் உன் பையனுக்கு அடுத்த 6 மாசத்துக்கு கல்யாண வாய்ப்பே இல்லை உடனே பொண்ணைப் பிடி ” என்று ஜோசியன் சொன்னதை நம்பி மகனுக்கு பொண்ணு தேடி அலைகிற அம்மா ,மகன், மகனின் கைத்தடி நண்பன் என முற்பாதி கதை பாண்டிராஜின் வசனத்தினால் ஜாலியாகப் போகிறது.
எ சர்டிபிகேட் ஹீரோ ஜி.வி,பிரகாஷை ‘நாச்சியார்” பக்குவப்படுத்தி யூ சர்டிபிகேட் ஏரியாவுக்குள் அனுமதித்திருப்பதை தயாரிப்பாளர்கள் சாமர்த்தியமாக பயன்படுத்தி இருக்கிறார்கள்
விஜய் ஆண்டனி மாதிரி இல்லாமல் நடிப்பிலும் இசையிலும் ஜிவிபி சிறந்த தேர்ச்சி! ‘சண்டாளி பாட்டு கலக்கல்.
ஒரு காலத்தில் பிரபு கார்த்திக்,சத்யராஜ்க்கு ஜாயின்ட்டாக கவுண்டர் இருந்ததைப்போல யோகிபாபு வளர்ந்திருக்கிறார். கப்ளிங் கச்சிதம். சம்பந்தியாகப்போகும் மன்சூரை ஜாமீனில் எடுக்க முடியாத எம்.எல்.ஏ.வும் தமிழ் நாட்டிலா? தெர்மாகோல் வசனமெல்லாம் பேசிய பாண்டிராஜ் காமடிக்காக இந்த இடத்தில் குப்புற விழுந்திருக்கிறார்.
இடைவேளைக்குப் பின்னர் கதை வறண்ட காவிரியாகி விடுகிறது. எதிர்பார்க்கிற மாதிரியே கதையும் போகிறது. நாயகி அர்த்தனா பினு அழகு. மன்சூரலி,கோவை சரளா ஜோடி இந்த படத்தில்தான் அடக்கி வாசிக்க வைக்கப்பட்டிருக்கிறது.
செம என்று படம் முழுவதையும் சொல்ல முடியவில்லை.