பார்த்திபன் -சீதா மகள் இருவரில் கீர்த்தனாவுக்கு திருமணம் முடிந்து விட்டது, கீர்த்தனா அப்பா வளர்ப்பு.
அம்மா வளர்ப்புதான் அபிநயா.இவருக்கும் கல்யாண வயதுதான்! ஆனால் அம்மாவின் ஆசை அவரை நடிகையாக பார்ப்பதுதான் என்கிற அரைவை சத்தம் கிசு கிசு மில்லில் அதிகமாக ஒலித்தது.
சீதாவிடம் கேட்டால் போச்சு!
“மகளை நடிக்க விடப்போகிறீர்களாமே , உண்மையா?”
“வடிகட்டின பொய்ங்க. அபிநயாவை நடிகையாக்கப் போவதில்லை. அவளுக்கு மும்முரமாக மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய முக்கிய வேலையே அதுதான், ” என அழுத்தம் திருத்தமாக சொன்னார் சீதா.
கல்யாண சமையல் சாதம் அது சீதா வரப்பிரசாதம்!