முதலில் அரசியலுக்கு வருவார் என்கிற அறிகுறிகள் தளபதி விஜய் படங்களில்தான் அதிகம் தெரிந்தன. ‘டைம் டு லீட்’ என்கிற ஒற்றை வாசகம் மேடம் ஜெயலலிதாவை அல்லது சின்ன மேடம் சசிகலாவை அதிகமாக பாதித்திருக்கலாம். அதனால்தான் அவர்கள் ஆட்சி நடந்த நேரத்தில் தளபதி விஜய்யின் ‘தலைவா’ படத்துக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்தார்கள். எல்லா மட்டத்திலும் சிக்கல்கள்.
இதன் விளைவாக விஜய் கொடநாடு வரை சென்று திரும்பினார். அரசியல் பிரவேசமும் இருக்கும் என்பதாக அவரது ரசிகர்களும் நம்பினார்கள்.
ஆனால் முதலில் கட்சியைத் தொடங்கிவிட்டார் உலகநாயகன் கமல்ஹாசன்.
பெயரும் கொடியும் அறிவிக்காமல் கட்சி வேலைகளை தொடங்கி விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஆனால் அடித்தளம் வலுவாக அமைத்துக் கொண்டிருந்தும் விஜய்யின் திக்விஜயம் இன்னும் அறிவிக்கப்படாமலேயே சஸ்பென்சாக போய்க் கொண்டிருக்கிறது.
ஆனால் அவரது தளபதி 62 படம் அந்த சஸ்பென்சை நீக்கி விடும் என்கிறார்கள். நடப்பு அரசியலை ஏஆர்.முருகதாஸ் நார் நாராக கிழித்து எறிந்திருக்கிறாராம். ராதா ரவி, பழ.கருப்பையா இருவரையும் வைத்து தளபதி விஜய் விளையாடி இருக்கிறாராம். கதைப்படி கிளைமாக்சில் அவர் முதல்வர் ஆசனத்தில் அமரவேண்டும்.
ஒரு அரசியல் கட்சியினால் அரசும் நிர்வாகமும் எவ்வளவு மோசமாக பாதிக்கப்படுகிறது என்பதை புள்ளி விவரங்களுடன் முருகதாஸ் சொல்லி இருப்பதாக யூனிட் ஆட்கள் தகவல் தருகிறார்கள். இந்த படத்துக்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை.
படம் புயலை கிளப்புமா பூகம்பம் ஏற்படுத்துமா?