தேசிய விருது வாங்கிய இயக்குநர்களில் சுசீந்திரனும் ஒருவர்,
வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல,ராஜபாட்டை, பாயும் புலி ,அழகர்சாமியின் குதிரை என இவரது பட வரிசை நீளும்.
தற்போது ‘சாம்பியன்’ படத்தின் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் .இசையை கவனித்தவர் யுவன் சங்கர் ராஜா. ஆனால் தற்போது அவருக்குப் பதிலாக ரோகன் இசை அமைக்கிறார்.
ஏனிந்த மாற்றம் ,உறவில் விரிசலா?
“சுசீந்திரன் சொல்வதென்ன?
“நான் யுவனின் ரசிகர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவெனில் சாம்பியன் படத்தில் அவருடன் கரம் சேர்க்க முடியவில்லை.அவருடைய புதிய நண்பர்கள்தான் காரணம், அவருடன் இதுபற்றி பேசவும் முடியவில்லை.அவருடன் பணியாற்ற ஆசைதான், காலம் கனிந்து வரும் என நம்புகிறேன்”என கூறி இருக்கிறார்.