தமிழ் , மற்றும் தெலுங்கு சினிமாவில் கடந்த 10 வருடங்களாக முன்னணிகதாநாயகியாக வலம்வரு பவர் நடிகைதிரிஷா.இவருக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. இதையடுத்து சில தமிழ் ,தெலுங்கு பட வாய்ப்புகள் பறி போயின. இந்நிலையில் திருமணத்தேதிக்காக அனைவருக்கும் காத்திருந்த நேரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும்,திருமணமும் முறிந்து போனதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திரிஷாவுக்கு மீண்டும் படவாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளதாம்..தமிழ், தெலுங்கில் தயாராகும் போகி படத்திலும், செல்வராகவன் இயக்கும் படத்தில் சிம்புக்கு ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். கமல் ஜோடியாக நடிக்கவும் தேர்வாகியுள்ளார்.மேலும்இவர் நடிப்பில் உருவாகியுள்ள பூலோகம், அப்பாடக்கர் படங்களும் வெளியீட்டுக்கு தயாராகி வருவதும் குறிப்பிடத் தக்கது!