சென்னை விமான நிலையம் என்றாலே அரசியல் தலைவர்களுக்கு அது வம்பு வாங்கும் நிலையம் என்பதாகத்தான் தோன்றும் ,அந்த அளவுக்கு அதை கேப்டன்,சூப்பர் ஸ்டார் இருவரும் மாற்றி இருக்கிறார்கள். ஆனால் விமான நிலைய செய்தியாளர்களிடம் பார்த்திபன் ஒரு தடவை கூட சிக்க வில்லையா? ஜர்னோஸ் ! ட்ரை பண்ணுங்களேன்!
மேடைகளில் தெர்மாகோல்ஐடியாக்களை அள்ளிவிடும் அரசியல்வாதிகள் ஒரு கோர்ஸ் நம்ம பார்த்தீபனிடம் வகுப்பு எடுத்துக் கொண்டால் நைஸ் குத்து நாகரீக குத்து வகையறாவை கற்றுக்கொள்ள முடியும்.
விஜய் டி.வி. நடத்திய அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தனுஷ் ,நயன்,விஜய் சேதுபதி என பல பிரபலங்கள் சிறந்தவைகளுக்காக பரிசுகள் வாங்கினார்கள். அந்த விழாவில் கலந்து கொண்ட பார்த்தீபன் “பெஸ்ட்ஷூட்டர் விருது வழங்கி இருக்கலாம் தூத்துக்குடி மக்களை குறி பார்த்து சுட்டவர்களுக்கு அந்த அவார்டை மக்கள் சார்பில் கொடுத்திருக்கலாம்.”என்று சொன்னவர் முத்தாய்ப்பாக ஒரு வரி சொன்னார்.
“சமூக விரோதிகளைப் பற்றி சொல்லவில்லை!”