ஆளைப் பார்க்காமல் திட்டுவது என்றால் டுவிட்டர் மகாஜனங்களுக்கு இருட்டுக்கடை அல்வா ருசி!
சாமி ஸ்கொயர் முன்னோட்டம் சில பல பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. கஸ்தூரி ஆடியிருக்கிற ஐட்டம் ஆட்டத்தைப் பார்த்த சிலருக்கு ‘ஜில்’லெனவும் மற்றும் சிலருக்கு ‘ஜிஞ்சர்’ கசாயமுமாக இருந்திருக்கிறது.
ஆவேசப்பட்ட ஒருவர் “என்னம்மா இது? வயசுக்கேத்த மாதிரி நடிங்க. நீங்கள்லாம் அயிட்டம் டான்ஸ் ஆடலாமா?” எனக்கேட்டு நக்கல் வாய்க்காலை வெட்டி இருந்தார்,
கருத்து கஸ்தூரி என்ன சாதாரண ஆளா? விக்ரமின் ரசிக ஜனங்களை செமத்தியாக கவனித்து விட்டார். ஆனால் விக்ரமையும் தேவை இல்லாமல் தெருவுக்கு இழுத்து விட்டிருக்கிறார்.
“சொந்த பொண்ணை விட சின்ன பொண்ணோட டூயட் பாடுறதுதான் வயசுக்கேத்த நடிப்பா?அந்த அளவுக்கு எனக்கு நடிக்க வராது சாமி! ஏன்னா நான் பேய்க்கு பொறக்கல .பூதம் இல்ல. போடா மூடிக்கிட்டு”என்று ரசிகர் வெட்டியிருந்த கால்வாயை ஆறு அளவுக்கு அகலமாக்கி விட்டார்.
“நான் சாமி இல்ல பூதம்” என விக்ரம் சொன்ன டயலாக்கை சுட்டிக்காட்டி சாடியது ஒரு பக்கம் என்றால் “சொந்த பொண்ணை விட சின்ன வயசுப் பொண்ணுகளோடு டூயட் பாடுறது” விக்ரம் மட்டும்தானா ,ரஜினி,கமல் இவர்களெல்லாம் இல்லையா என்று மற்ற ரசிகர்களும் கிளம்பி விட்டார்கள்.