ஒரு வருஷம் ஓடிப் போனாலும் ‘ஆளப்போறான் தமிழன்’ பாட்டுக்கு மதிப்பும் மரியாதையும் உயர்ந்து கொண்டே போகிறது. தளபதி விஜய் நடித்திருந்த மெர்சல் படத்தில்தான் அப்பாடல் இடம் பெற்றிருந்தது. ஏஆர்ரகுமான் இசையில் உருவான பாடல் உலகெங்கும் பசுமரத்தாணிபோல் பதிவாகி இருக்கிறதென்றால் அதன் காரணம் பாடலின் வரிகளும் தளபதி விஜய்யும்தான்! யூ ட்யூப்பில் ஐந்து கோடி பேர் இந்த பாடலுக்கு அடிமைகள் ஆகி இருக்கிறார்கள்.