காலம் ரொம்பவே வேகமாக மாறி வருகிறது.
அந்த மாறுதலுக்கு ஏற்ப வட இந்தியர்கள் தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். முழுமையாக இல்லை என்றாலும் பெண்கள் மத்தியில் சுலபமாகி இருக்கிறது.
‘வீரே டி வெடிங் ‘ என்கிற திரைப்படம் அண்மையில் வெளியாகி வணிக ரீதியில் யாரையும் தட்டு ஏந்த வைக்கவில்லை. அந்தக்காலத்து சாராய வியாபாரிகள் மாதிரி கோணிகளில் பணத்தை கட்டுகிறார்களாம்.கரீனா கபூர்,சோனம் கபூர், மற்றும் ஸ்வரா பாஸ்கர் ஆகிய மூன்று நடிகைகள் புரட்டி எடுத்திருக்கிறார்கள். விமர்சகர்களும் பாராட்டுகளை குவித்திருக்கிறார்கள்.
ஆனாலும் செல்லமாக குட்டு வைத்திருக்கிறார்கள். அது கடுமையான குத்தாக இருந்திருக்க வேண்டும் என்பது சிலரின் கருத்து.
அப்படி என்ன காட்சி அது?
நடிகை ஸ்வரா பாஸ்கர் ‘சுய இன்பம் ‘அனுபவிப்பது மாதிரியாக ஒரு காட்சி.
தணிக்கைக்குழுவின் அனுமதி பெற்றுள்ள காட்சி . பெண்கள் தியேட்டர்களில் மிகவும் ரசிக்கிறார்கள். அந்த காட்சியை வேண்டாம் வெட்டு என சொல்வதா?
பொங்குவது நாமல்ல. நடித்திருக்கிற ஸ்வரா பாஸ்கர்.
“யோவ்! இதெல்லாம் வெறும் நடிப்புத்தான்யா, எதுக்கு கொதிக்கிறிங்க! பாசாங்குக்காரர்கள்” என்கிறார்.