அரச மரத்தைப் பிடிச்ச சனியன் அங்க உட்கார்ந்திருந்த அப்பாவி பிள்ளையாரையும் சேர்த்து பிடித்த கதையாகிப் போச்சு அமெரிக்கப் போகிற நடிகைகளின் கதை, ஆனந்த சங்கரின் இயக்கத்தில்நடிக்கும் நோட்டா நடிகை மெஹ்ரின் தெலுங்குப்படங்களிலும் நடிக்கிறார். கனடாவில் ஷூட்டிங். அப்படியே அமெரிக்காவில் இருக்கும் சொந்தங்களையும் பார்த்து விட்டு வந்திரலாம் என்று பறந்து போனவரை கொக்கி போட்டு குடைந்திருக்கிறது அமெரிக்கப் போலீஸ்.
“தெலுங்கு நடிகை” என்று சொன்னதும் ‘சிக்கிச்சு ரெட்டைவால் குருவி’ என்று குஷியாகிப் போயிருக்கிறார்கள்.
“புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரு கலை விழா நடத்துறோம்னு நடிகைகளை வச்சு தப்பான பிசினஸ் பண்ணி மாட்டி இருக்காங்கோ. அதில அம்மிணிக்கு ‘ரோல்’ஏதாவது உண்டான்னு விசாரிக்கிறோம்” என்று சொல்ல பதறிப்போனாராம் மெஹ்ரின். இருந்தாலும் அரை மணி நேரம் விசாரணை நடத்தி விட்டுத்தான் அனுப்பி இருக்கிறார்கள்.
இப்ப அமெரிக்காவில் ஷூட்டிங் என்றாலே ஆந்திர நடிகைகளுக்கு அடி வயிறு கலங்குகிறது.
சென்னையைச்சேர்ந்த ஒரு நடிகை தெலுங்குப் பட பெரிய ஹீரோவுடன் நடித்து பிரபலமானார்.அவருடன் காதல் என கிசு கிசு வந்து பிறகு காணாமல் போனது.நடிகரும் கைவிட்டு விட்டார், தற்போது கோலிவுட்டில் கவர்ச்சி வேடமாவது கிடைக்குமா என முயற்சி செய்கிறார் என்கிறார்கள். இந்த நடிகைக்கும் சிக்காகோவில் பங்கு என்கிறார்கள்.
இன்னொருவர் பெங்களூரு நடிகை. மற்றொருவர் டைவர்ஸ் ஆன தெலுங்கு டைரக்டருடன் தொடர்பில் இருந்தவர் என்கிறார்கள். மெகா நடிகருடன் ஒப்பந்தம் ஆகி ரசிகர்களின் வெறுப்பினால் விலக்கப்பட்ட நடிகையும் ஒருவராம். டி,வி.நிகழ்ச்சியில் பிரபலமான நடிகையும் உண்டு என்கிறார்கள். இப்படி நாளுக்கு நாள் ஆந்திராவில் அடையாளம் காட்டியபடி இருக்கிறார்கள். இதில் கூத்து என்னவென்றால் எல்லா நடிகர்கள் மீதும் குற்றம் சாட்டுகிற அந்த நடிகையும் அடக்கம் என்பதுதான்!
நாலு நாள் பல்லு விளக்காத வித்தாரக்கள்ளி விடிஞ்சதும் பேஸ்ட்டும் பிரஷுமாக இருக்கிற சித்தாடைக்காரியை ‘நாறவாய்ச்சிறுக்கி’ என்றாளாம்.