சர்க்கார் என்பதில் ‘க்’ கை எடுத்துவிட்டு “சர்கார் ” என இந்திப்பட ஸ்டைலில் தளபதி விஜய்யின் படத்துக்கு பெயர் வைத்து விட்டார்கள். இதற்கும் தயாரிப்புத் தரப்பில் ஏதாவது ஒரு காரணம் வைத்திருப்பார்கள். சரி இது தமிழ் மொழி வல்லுநர்கள் தொடர்புடையது.
விஜய்யின் மகன் சென்னையில் அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் 12 வது கிரேடை கடந்து அடுத்த கட்டத்துக்கு தயாராகி விட்டார்.
இன்னதுதான் படிக்கவேண்டும் என பெற்றோர் கட்டுப்படுத்தாத நிலையில் சஞ்சய் தேர்வு செய்திருப்பது ‘பிலிம் மேக்கிங்’. இதற்காக கனடாவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் சேரப் போகிறாராம் ஜாசன் சஞ்சய். இவரது சகோதரி சாஷாவுக்கு பேட்மிண்டன் விளையாடப் பிடிக்கும்.