தளபதி விஜய் மட்டும் “ம்” என்ற ஒற்றை எழுத்தை உச்சரித்திருந்தால் இந்நேரம் அவரது ரசிகர்கள் உலகையே புரட்டிப் போட்டிருப்பார்கள். தமிழகமே அதிர்ந்திருக்கும். தளபதியின் நாற்பத்தி நான்காவது ஆண்டு பிறந்த நாள் பலருக்கு அதிர்ச்சியையும் அளித்திருக்கும்.எப்படியெல்லாம் கொண்டாடலாம் என தனி பட்ஜெட்டே போட்டிருந்தார்கள் அவரது இயக்கத்தின் உறுப்பினர்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்த அப்பாவி ஜீவன்களின் அழுகுரல் இன்னமும் காற்றிலேயே மிதந்து கொண்டிருக்கிறேதே “வேண்டாம் பிறந்த நாள் விழா” என தடை போட்டுவிட்டார் தளபதி.
உடைக்கும் தெம்பு எவர்க்கு இருக்கிறது? ஆனாலும் பிரபலங்கள் வாழ்த்துகள் வரிசையாக அணி வகுத்துவிட்டன.
கலைப்புலி தாணு.பிரமாண்டங்களின் பிதாமகன்.
“இன்ப நாளிது இனிய நாளிது, தம்பிக்குப் பிறந்த நாள் தரணிக்குச் சிறந்த நாள்.இனிய இத்திருநாளில் நின் ‘சர்கார்’ அகிலம் வெல்ல வாழ்த்துகிறேன்” என கடிதம் எழுதி இருக்கிறார். தொலைபேசி யிலும் வாழ்த்தி இருக்கிறார்.
மக்கள் செல்வன் விஜயசேதுபதியின் வாழ்த்து இது.” எளிமை, அடக்கம் , மக்களின் மகத்தான ஆதரவு .உங்களின் ‘சர்கார்’க்காக வெயிட்டிங்!
அடுத்து ஜீவா.
“உண்மையான நண்பன். வாழ்த்துகள் அண்ணா” இப்படி வரிசைகள் நீண்டு கொண்டே இருக்கின்றன.
பல இடங்களில் நற்பணிகளும் நடந்தன. கரையைத் தழுவும் அலைக்கு கை வைத்து தடை போட முடியுமா?