சொந்த வாழ்க்கையில் சூன்யம் வைத்துக் கொண்ட ஆந்திர நடிகை ஸ்ரீ ரெட்டி கிளப்பிய ‘படுக்கை அழைப்பு’ மேட்டர் எல்லா மாநிலங்களிலும் விட்டு விட்டு எரிகிறது, கெழுத்தியை விழுங்கிய நாரையைப் போல சிலர் துடிக்கிறார்கள்.
‘மல்லுக்கட்டு’ ‘சிங்கம் புலி ‘ஆகிய படங்களில் நடித்திருக்கும் ஹனி ரோஸ் “படுக்கைக்கு கூப்பிடும் அசிங்கம் மலையாளத்திலும் இருக்கிறது” என்று கிளப்பி இருக்கிறார்.
தன்னை இதற்காக சிலர் டபிள் மீனிங் பேசி வசமாக்கப் பார்த்தார்கள். சிலர் மூளைச்சலவை செய்து முயன்றார்கள் .மன உறுதியுடன் அவர் இருந்ததால் பாச்சா பலிக்கவில்லை என்பதாக சொல்லி இருக்கிறார்,
மலையாள நடிகர் சங்கம் மண்ணைத் தோண்டிக் கொண்டிருக்கிறது, மண் புழு மாட்டாதா என்று!