ஆபாச வரிகள் ஆட மறுத்த உலக அழகி.

அயிட்டம் டான்ஸ் ஆடுவது என்று முடிவாகி விட்டது, அப்புறம் எதுக்கு உழக்கில் கிழக்கு மேற்கு?இவர்தான் இந்தியாவின் ‘மடோனா’வாம். இப்படி சொல்லித்தான் அவரிடம் சம்மதம் வாங்கி இருக்கிறார்கள்,
முன்னாள் உலக அழகி ஐஸ்வரியா பச்சன் இந்திப் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ஆரம்பத்திலேயே அயிட்டம் டான்ஸ் இருப்பதாக சொல்லித்தான் அக்ரிமென்ட், அயிட்டம் டான்ஸ்க்கு பாடல் எழுதுகிறவர் ஹரே ராம் ஹரே கிஷன் என்று பஜனை வரிகளையா தீட்ட முடியும்?
என்ன எழுதி இருந்தார் என்பது தெரியவில்லை.
“பாடல் வரிகளை மாற்றினால்தான் காலில் சலங்கையை கட்டுவேன்” என்பதாக சொல்லிவிட்டார், பெரிய இடம். சூப்பர் ஸ்டாரின் மருமகள் . மறுக்க முடியுமா?
பாடலை மாற்றிய பின்னர் ஆடியிருக்கிறார் ஐஸ்வர்யா பச்சன்.
அவர் ஆட்சேபித்த பாடலில் ‘பெவிகால் சே’ என்கிற வரி இருந்ததாம் .இது எதனுடன் ஒட்டி ஏழரையை கூட்டியதோ, தெரியவில்லை.