
“முயற்சி கால்பங்கு, விதியின் ஒத்துழைப்பு முக்கால் பங்கு , நினைப்பவன் நீ, முடிப்பவன் அவன்.” —கவியரசர் கண்ணதாசன்.
ராம் சரண் அல்லு அர்ஜுன் ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டவர் அமலாபால். சினிமாவில் இருந்து பிரிக்க முடியாதது எது என்றால் அது கிசு கிசு தான்.!
அதையெல்லாம் உடைத்துப் போட்டது இயக்குநர் ஏஎல்.விஜய் யுடன் நடந்த கல்யாணம். இதை காதல் கல்யாணம் என்று சொன்னார்கள். ஆனால் இந்த காதல் கல்யாணத்தின் வயசு இரண்டே ஆண்டுகள்தான். பரஸ்பர விவாக ரத்து என விலகிப் போனார்கள்.
ஆனால் ஏ எல்.விஜய்க்கு முன்னதாகவே தனக்கு “சாக்லேட் பாய் மாதவன் மீது ‘க்ரஷ்’ இருந்ததாக இப்போது சொல்கிறார் அமலா பால்! இந்த காதல் ஈர்ப்பை மாதவன் முன்னிலையில் வெளிப்படுத்தியது ஆச்சரியம் .அதை விட அவரை கட்டி அணைத்து வெளிப்படுத்திக் கொண்டதுதான்!
அடுத்த காதல் யார் மீது?












