இதெல்லாம் கொடுமைங்க!
புதுக்காதல் பிறந்ததும் இரண்டு பிள்ளைகளோடு மனைவியை விவாக ரத்து செய்து விட்டு பவன் கல்யாண் இரண்டாவதாக கல்யாணம் பண்ணிக்கொண்டார் .”இதெல்லாம் சரியா தலைவா?” என்று பவனிடம்அப்போது கேட்காத அவரது ரசிகர்கள் இப்போது அவரது மாஜி மனைவி ரேணுவிடம் கேள்விகள் கேட்பதெல்லாம் அநாகரீகம் இல்லையா?
விவாக ரத்தான மனைவி ரேணு தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கப்போவதாக அறிவித்ததும் பவனின் ரசிகர்கள் ரேணுவை மிரட்டத் தொடங்கி விட்டார்கள்.
“நரகத்தின் பல வாசல்கள் உனக்காக திறந்துகிடக்கிறது” “உனக்கெதுக்கு இன்னொரு வாழ்க்கை சும்மா இருக்க முடியலியா” “கொலை விழும் எச்சரிக்கை” இப்படியெல்லாம் டிவிட்டரில் மிரட்டல்கள்.இதெல்லாம் ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடுதானே?
“என்னை இந்த மிரட்டல்கள் எதுவும் செய்துவிடாது.டிவிட்டரில் சினிமாக்காரர்கள்,அரசியல்வாதிகளை ஆபாசமாக திட்டுவதற்கென்றே அநாமதேயங்கள் போலியான கணக்குகள் வைத்திருக்கிறார்கள்.இப்படி நிறைய அநாமதேயங்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. கொலை மிரட்டல் விட்டவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்போகிறேன். சந்தோஷமாக புதிய வாழ்க்கையை தொடங்கப்போகிற நான் எதற்கு இந்த மண்டையிடி டிவிட்டரில் இருக்கவேண்டும்.அதனால் அதை விட்டு வெளியேறுகிறேன்” என்று ரேணு கூறி இருக்கிறார்.