வீட்டு சுவிட்ச்ள கைய வச்சு ஷாக் அடிச்சால் ஒரு உதறு உதறி விடுபடலாம், ட்ரான்ஸ்பார்மரில் கையை வைக்கலாமா? இண்டஸ்ட்ரியில் பெரிய ஆள் பவன் கல்யாண். பேரே பவர் ஸ்டார். மோதுனா மலையுடந்தான் மோதுவேன் என்று வீராப்பாக அந்த ஆள் மீது புகார்களை கலந்து அடித்தால் என்ன ஆகும்?
யார் யார் ஸ்ரீ ரெட்டிக்கு பின் இருந்து உசுப்பேத்தி விட்டு வேடிக்கைப் பார்த்தார்களோ அவர்கள் எல்லோருமே தற்போது ஸ்ரீக்கு பின்னால் இல்லை.
ஒரு ஆள் இரண்டு ஆட்களுடன் செக்ஸ் புகாரை நிறுத்தி இருந்தால் இண்டஸ்ட்ரி ஆட்கள் பாவம் புண்ணியம் பார்த்திருப்பார்கள்.சகட்டு மேனிக்கு எல்லோரையுமே சந்திக்கு இழுத்தால்?
ஒருத்தரும் வேலை கொடுப்பதாக இல்லை.
“வீட்டை காலி பண்ணியாகணும். சாப்பிட்டு நாலு நாள் ஆகுது என்ன செய்ய?” என்று கேட்கிறார் ஸ்ரீ ரெட்டி.