காதலர் விக்கி கூட அப்படி அழகழகாக படம் எடுத்துக் கொடுத்திருக்கமாட்டார் .செல்பி இரண்டு பேரும் சேர்ந்து எடுத்துக் கொண்டதாக மட்டுமே இருக்கும். ஆனால் தன்னுடன் இணையாக நடித்துவரும் நயன்தாராவுக்கு தனியாக ஒரு போட்டோ ஷூட்டே நடத்தி இருக்கிறார் தல. படங்களை அழகிய ஆல்பம் போட்டு தனது பரிசாக வழங்கி இருக்கிறார்.
தல கூட்டணி.
இதற்கு முன்னர் அப்புக்குட்டியை விதம் விதமாக படம் பிடித்தவர் தான் தல.
விலை உயர்ந்த பல கேமராக்கள் அவரிடம் இருக்கிறது. படப்பிடிப்பு களுக்கு செல்லும்போது கூடவே கேமராக்களுடன் விலை உயர்ந்த லென்ஸ்களும் இருக்கும்.
படப்பிடிப்புகளில் அனாவசியமாக எதையும் பேசுவதில்லை. நெருங்கிய நட்பு வட்டத்தில் மட்டும் அன்றாட அரசியலைப் பேசுவது உண்டு.
ஆனால் ஒருபோதும் அரசியல்வாதியாக மாட்டார்.