விட்டால் காதலியின் ஒவ்வொரு அசைவுக்கும் பாட்டுகள் வடிப்பார் போல! நயன்தாராவின் கோலமாவு கோகிலா படப் பாட்டுக்கு கிடைத்திருக்கிற வரவேற்பில் நயன் கிறங்கினாரோ இல்லையோ காதலர் விக்னேஷ் சிவன் சிலிர்த்துப் போய் இருக்கிறார்.
“உன்னால் பெருமைப்படுகிறேன்.உன்னுடைய நம்பிக்கை, தொழிலின் மீதுள்ள ஈடுபாடு,திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பாங்கு,புதிய கருத்துள்ள கதைகள் மீதுள்ள நாட்டம், ஆச்சரியப் படுத்துகிறது.கோலமாவு கோகிலா படத்துக்கு உனக்காக நான் எழுதிய பாடலுக்கு எத்தகைய வரவேற்பு! நெல்சன் திலிப் குமாரின் அருமையான கதையும் இசையரசு அனிருத்தின் இனிமையான பாடலும் கவர்ந்து விட்டன” என புளகாங்கிதம் அடைந்திருக்கிறார் காதலர் விக்னேஷ் சிவன்.