அதர்வாவை வைத்து `டார்லிங்’ பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கி வரும் `100′ என்ற படத்தில் ஹன்ஷிகா கதாநாயகி ஆகி இருக்கிறார். இந்த படத்தில் அதர்வா போலீசாக நடிக்கிறார்.எரும சாணி புகழ் ஹரிஜாவும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.யோகிபாபு காமெடியனாக நடிக்கிறார். ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ்.இசை அமைக்கிறார்.அவசர போலீஸுக்கும் 100 என்ற எண்ணுக்கும் தொடர்பு இருப்பதால், இப்படத்திற்கு ‘100 ‘என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில்,இப்படத்தின் மேக்கிங் (சில நொடிகளே) வீடியோவையும், புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதர்வா.