பெரிய திரை என்றால் பட்டு மெத்தையிலும் சின்னத்திரை என்றால் கயிற்றுக் கட்டிலிலுமா ‘அது’ நடக்கும்? எல்லாரும் மனிதர்கள்தானே! சினிமாவில் கேஸ்டிங் கவுச் அநாகரீகம் ஹாலிவுட் வழியாக வந்து நாறியது.
பாலிவுட்டில் சில அவுட் ஆப் போகஸ் நடிகைகள் அவர்கள் பட்ட கஷ்டத்தை காலம் கடந்து சொன்னார்கள். ஆனாலும் மறந்தும் கூட ஆண்களின் பெயரை சொல்லவில்லை.
ஆனால் தெலுங்கில் ஸ்ரீ ரெட்டி என்கிற நடிகை பெயரைச் சொல்லி நிர்வாணப்போராட்டம் நடத்தினார். அதனால் அவருக்குப் பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டது.
இதனால் நடிகர்கள் மீதே அந்த பெண்ணுக்கு வெறுப்பு ஏற்பட்டு நாள்தோறும் சிலர் மீது தப்பு சொல்லாவிட்டால் தூக்கம் வராது என்கிற நிலைமை.
தற்போது கடவுளின் தேசமான கேரளத்தில் சின்னத்திரை சீரியல் நடிகை இயக்குநரின் பெயரைச் சொல்லி குற்றம் சாட்டி இருக்கிறார். ‘உப்பும் மிளகாயும் ‘என்பது மலையாள காமடி தொடர். இதில் நடித்திருப்பவர் நிஷா ஷாரங். தொடரின் இயக்குநர் உன்னி கிருஷ்ணன் என்பவர் பாலியல் தொல்லை தருவதாகவும் இதை சுட்டிக்காட்டியதால் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.இதற்கு பின்னரும் இம்சைகள் தொடருமானால் சீரியலை விட்டு விலகி விடுவதாக சொல்லி இருக்கிறார் நிஷா.
என்ன பண்றது?