காதலுக்கு ஏதுய்யா வயசு?
“புடிச்சுப்போச்சு ,கட்டிக்கிட்டோம் உனக்கேன் பொங்குது “என்று கேட்கும் காலம்.
பாலிவுட்டில் பிரபலம் மிலிந்த் சோமன் .மாடல்,ஆக்டர் . இவருக்கு வயசு 52. அங்கிதா என்கிற சின்னப்பொண்ணு,வயசு 27. மகள் வயசு இருக்கலாம். இருவருக்கும் காதல் அங்கிதா ஏர் ஹோஸ்டஸ் .விமானப்பயணத்தில் மலர்ந்த காதல். மும்பையில் கல்யாணம் நடந்தது மரபுப்படி!
காட்டில் கல்யாணம் ( டைட்டில் நல்லா இருக்கே? ) பண்ணிக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை. அதுவும் ஒரு அருவிக்கு முன்னாடி! மிலிந்துக்கு வயசானாலும் எப்படிப்பட்ட ஆசையெல்லாம் இருக்குது பாருங்க,.அதுவும் கால்களில் எதுவும் அணியாமல் ! ஹை ஹீல்ஸ் போட்ட காலு கட்டாந்தரையில்.! வகை வகையான ஷூக்கள் அணிந்த கால் வெறுமையாக.
கிளம்பினார்கள் ஸ்பெயின். அங்க ஒரு காட்டுல ,அருவிக்கு முன்னாடி நின்னு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.
வாழ்க்கைன்னா அனுபவிக்கனுங்க!