“மழை…டிராபிக் நெருக்கடி…சக்சஸ் மீட்டுக்கு போயாகனும். இல்லேன்னா தெலுங்கு பிரஸ் தொட்டுக் கொள்வதுக்கு நாம்ப கோங்கரா சட்னிதான்…!”
இப்படியெல்லாம் மனசில் ஓடும்தானே! நம்ம கார்த்தியின் மனசிலும் ஓடியிருக்கவேண்டும்.! ஹைதராபாத்தில் சின்ன பாபு ( கடைக் குட்டிசிங்கம்.) சக்சஸ் மீட்டுக்கு காரில் புறப்பட்டவர் மழையினால் ஏற்பட்ட டிராபிக் ஜாமில் மாட்டிக்கொள்ள ,போனில் சொன்னால் தெலுங்குத் தயாரிப்பாளர் என்ன சொல்வார்?
யோசனையே பண்ணவில்லை. படக்கென கதவைத் திறந்து காரிலிருந்து இறங்கி விட்டார். உதவியாளர்களும் இறங்கி விட்டனர்,
“ஆட்டோவ பிடி. கிளம்பு”
ஆட்டோக்காரர் குஷியாகி விட்டார். எல்லோர்க்கும் ஆச்சர்யம்.