ஈரக் குலையை அறுத்துக் அதையும் துண்டு போட்ட கொடுமையை விட கோரமானது காட்டெருமைகள் சேர்ந்து அப்போதுதான் ஈன்ற மான் குட்டியை மிதித்து துவம்சம் செய்வதைப் போல..
17 மனித மிருகங்கள் 12 வயது சிறுமியை சிதைத்துப் போட்டதை புத்தனும் மன்னிக்க மாட்டான். தூக்குத்தண்டனை என அறிவித்த பின்னரும் பாலியல் வன்முறை அதிகமாகவே நடக்கிறது.
மக்கள் செல்வன் விஜயசேதுபதியினால் சினத்தை அடக்க முடிய வில்லை.
“என்ன சொல்றதுன்னே தெரியல.ஒரு பெண் மேல நடந்தாலே தாங்க முடியாது….இவனுங்களை பயங்கரமா கொன்னு போட்டாலும் பத்தாது.தண்டனை ரொம்பக் கடுமையா இருக்கணும்.அது பயமுறுத்தனும்.பெண்கள்தான் இந்த பூமிக்கு சொந்தக்காரங்க.அவங்களாலதான் பூமி ஸ்ட்ராங்கா இருக்கு. தாய் நாடுங்க” என்கிறார் விஜய் சேதுபதி