“பத்திரிகையாளர்கள் முன்னாடி உன் நடிப்பைக் காட்டு ..நாட்டியம் ஆடு,! சமத்த காட்டு !அடுத்த படத்துக்கான அட்வான்சை தாரேன்” என்று காலையில் டைரக்டர் நடிகர் ராகவா லாரன்ஸ் விட்ட சவாலுக்கு ஸ்ரீ ரெட்டி இன்று பிற்பகலே பதிலைச் சொல்லி பதுங்கி விட்டார்.
“ரெண்டு பேரும் விவாதம்னு வந்தால் நீங்க தோற்பது உறுதி! ரெண்டு பேரும் உங்க படத்தில நடிப்போம்.எனக்குத் திறமை இருக்கு.நான் உங்க திறமையைப் பார்க்கிறேன். நீங்க தயாரா? நாம்ப ரெண்டு பெரும் சேர்ந்தா சூப்பரா இருக்கும்!” என்கிறார் ரெட்டி.
“சாதுர்யம் பேசாதடி.என் சலங்கைக்குப் பதில் சொல்லடி ” என்கிற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருது. புடைக்கத் தெரியாதவள் கையில சொலகை கொடுத்து என்ன பிரயோசனம்? பாயும் பெண்புலியா இருப்பேன்னு பார்த்தால் அடுப்பங்கரையில் படுக்கும் பூனையா போயிட்டியே!