இடம் பொருள் ஏவல் படத்துக்காக இளைய இசைஞானி யுவன் ஷங்கர் ராஜாவை முதன்முறையாக சந்தித்தேன். அதன் பிறகு என் இயக்கத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற தர்மதுரை படத்திலும், அடுத்து என் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள கண்ணே கலைமானே படத்திலும் இணைந்து எங்கள் உறவு பலமானது. இப்படங்களை அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில், நான் இயக்கும் புதிய படத்தை யுவன்சங்கர் ராஜா தான் தயாரிக்க இருக்கிறார் என்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.